Header Ads

test

மட்டக்களப்பில் ஒரு ஆசிரியருக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் - வெடித்தது போராட்டம்.

 மட்டக்களப்பு தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை மாற்றக்கோரி பழைய மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியரான உதயரூபனை மாற்றக்கோரி பழைய மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் போன்றவை இணைந்து பாடசாலைக முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.    

41 குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒரு ஆசிரியர் தங்களது பாடசாலைக்கு பொருத்தம் அற்றவர் என்றும் உடனடியாக அவரை இடம்மாற்றக் கோரியும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை கதவுகளை மூடிய பழைய மாணவர் சங்கமும் பெற்றோர்களும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாடசாலைக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மட்டக்களப்பு மாவட்ட உதவி கல்வி பணிப்பாளர் ரவீந்திர அம்மனியிடம் மகஜர் ஒன்றை கையளித்ததுடன் அவர் பாடசாலை கதவைத்திறந்து மாணவர்களை செல்வதற்கு அனுமதி அளித்து இருந்தார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக சில ஆசிரியர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ய சென்றுள்ளதுடன் சில ஆசிரியர்கள் மீண்டும் திரும்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாக இருந்தாலும் அதிகாலையிலேயே மாணவர்கள் பாடசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.   


No comments