Header Ads

test

நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது.

 வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த 4 ஆம் திகதி இரவு நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், சந்தேக நபர்கள் நால்வர் நேற்றிரவு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட 4 கூரிய வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

 அத்துடன், கொலைசெய்வதற்காக சந்தேக நபர்கள் பயணித்த காரும் இனங்காணப்பட்டுள்ளதுடன், அதனை கைப்பற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் வழைத்தோட்டம் பகுதியைச்சேர்ந்த 23 முதல் 31 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


No comments