Header Ads

test

யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் 9 இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருட்டு.

 யாழ்ப்பாணத்தில் 4 நாட்களில் 9 இடங்களில் பிள்ளையார் சிலைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் யாழில் பிள்ளையார் சிலை தொடர் திருட்டை கண்டுபிடிக்கவென பொலிஸ் குழு ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பொலிஸ் குழுவானது நேற்றைய தினம் திருடர்களை அடையாளம் கண்டுள்ளது.

அதன்படி காங்கேசன்துறை நல்லிணக்கப்புரம் குடியேற்ற பகுதியில் வசிக்கும் குழு ஒன்று பிள்ளையார் சிலைகளை திருடி கொழும்பு, ஆமர் வீதியில் கடை ஒன்றை நடத்திவரும் ஒருவருக்கு விற்பனை செய்து வருவது இதுவரையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த திருட்டை விசாரித்துவரும் விசேட பொலிஸ் குழு தற்பொழுது ஆமர் வீதி வர்த்தகரை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

தற்பொழுது 2 சிலைகளை பொலீசார் மீட்டுள்ள நிலையில் மற்றைய சிலைகள் சுமார் 350,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.


No comments