யாழில் 3 பிள்ளைகளின் தந்தைக்குநேர்ந்த பெரும் சோகம்.
யாழில் பாம்பு தீண்டிய குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனன்றி உயிரிழந்துள்ளதாக தொியவந்துள்ளது. அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாதவகை பாம்பு ஒன்று அவரை தீண்டியது. இதனையடுத்து சிகிச்சை பெற்று மறுநாள் அவர் வீடு திரும்பியிருந்த நிலையில் கடந்த 26ம் திகதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
Post a Comment