Header Ads

test

பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி.

 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கிசூட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (24-12-2021) இரவு நடைபெற்றுள்ளது.

மேலும் குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூடு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, காயமடைந்தவர்கள் கல்முனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


No comments