Header Ads

test

ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

திருகோணமலை சீனக்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் போதே பேருந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் துறை சுதந்திர வர்த்தக வலயத்துக்கு அருகாமையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ் விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சீனக்குடா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 






No comments