Header Ads

test

மன்னாரில் காணாமல் போன 2ஆவது மீனவரின் சடலமும் மீட்பு.

 மன்னார் - கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 2 ஆவது மீனவரின் சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த துாண்டில் மீன்பிடி தொழிலாளர்கள் கோந்தைப்பிட்டி கடலில் சென்றுகொண்டிருந்த நிலையில், மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக கடலில் பாய்ந்த மற்றைய மீனவரும் கடலில் இழுத்து செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.

தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஒரு மீனவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரின் சடலம் இன்று காலை மன்னார் உப்பளம் கடற்கரையில்  மீட்கப்பட்டுள்ளது. 


No comments