Header Ads

test

தலைமன்னாரில் 12 மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று.

 தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 12 மாணவர்கள் உட்பட மொத்தம் 15 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 50 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது தலைமன்னார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் 12 மாணவர்கள் மற்றும் 3 பெற்றோர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைமன்னார் வைத்தியசாலையில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்ட மாணவர் தொடர்பான பரிசோதனையின் போது பாடசாலை மாணவர்கள் உட்பட 15 மாணவர்கள் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் தொடர்புடைய வீடுகளில் மாணவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


No comments