யாழில் 105 வயதில் காலமான மூதாட்டி.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 105 வயதான மூதாடி ஒருவர் இன்று உயிரிழதுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 105 வயதான லட்சுமி தம்பிப்பிள்ளை ஆவார்.
உயிரிழந்த மூதாட்டிக்கு 5 ஆண் பிள்ளைகளும் 5 பெண் பிள்ளைகளுமாக 10 பிள்ளைகள் உள்ள அதேவேளை பேரப் பிள்ளைகள் 45 பேரும், மூன்றாம் தலைமுறையான பூட்டப் பிள்ளைகள் 83 பேரும், நான்காம் தலைமுறையாக 12 கொப்பாட்டன் பிள்ளைகளுமாக மொத்தம் 150 பேரை கொண்ட குடும்பம் ஆகும்.
லட்சுமி தம்பிப்பிள்ளை 10/5/1916 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் 1901 ஆம் ஆண்டு பிறந்து 1990 ஆம் ஆண்டு 90 வயதில் காலமானார்.
இதுவரை எந்தவிதமான நோய் நொடிகளுமின்றி சுகதேகியாக வாழ்ந்து வந்த நிலையில் குறித்த மூதாட்டி உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment