Header Ads

test

வடமாகாண ஆளுநர் மற்றும் இராணுவத் தளபதி சந்திப்பு.

  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் போது, வடமாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த தமது பூரணமான ஆதரவை இராணுவம் வழங்கும் என ஆளுநரிடம் இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார். 




No comments