ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை.
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
அத்தோடு இந்த வைரஸானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உலக சுகாதார ஸ்தாபனம் அனைத்து நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.
ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் முன் அறிகுறிகளற்ற பல பிறழ்வுகளைக் கொண்டுள்ளதனால் ஒட்டுமொத்த உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுவதாகவும் WHO எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment