இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்.
பனாமுரே பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி வழங்கிய முறைப்பாடு காரணமாக கைது செய்யப்பட்ட பனாமுரே, வெலிபோத யாய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று காலை பனாமுரே பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பிரதேச மக்கள், இந்த மரணத்திற்கு பொலிஸாரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.
Post a Comment