விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள துப்பாக்கி.
இரண்டு ஹெக்டேயருக்கு மேல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஐந்து ஹெக்டேயருக்கும் மேற்பட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கே இதற்கு முன்னர் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர்,காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளினால் ஏற்படும் சேதங்கள் மிக அதிகமாக இருப்பதாக விவசாயிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் காட்டு விலங்குகளினால் ஏற்படும் சேதங்களினால் இலங்கையின் விவசாய உற்பத்திகளில் சுமார் 40% முதல் 50% வரை வீணடிக்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment