ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.
நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சி மக்களிடம் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டாக்டர் ரஞ்ஜித் பட்டுவன்துடுவ தெரிவித்தார்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு மக்களின் நடத்தையைக் கண்டு தனது வருத்தத்தை அவர் தெரிவித்திருந்தார்.
Post a Comment