Header Ads

test

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

 உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் உலக சந்தையில் நேற்று(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,863 அமெரிக்க டொலராக காணப்பட்டுள்ளது.

இது விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகளவில் பொருளாதாரம் முடங்கிப்போயுள்ள நிலையில், உலக சந்தையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments