Header Ads

test

மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்.

 நாட்டில் கால் போத்தல்களில் மதுபான தயாரிப்பை தடைசெய்வதற்கு அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ஸ கூறியுள்ளார்.

புகையிலை மற்றும் மது ஒழிப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் கலந்து கொண்ட 72 சதவீதமானோர் கால்வாசி மதுபான போத்தல்களை தடை செய்ய வேண்டும் எனக் கருத்து கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் 17-30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 40 சதவீதமானோரும், 31-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 35 சதவீதமானோரும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதமானோரும் கலந்து கொண்ட இந்த ஆய்வில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


No comments