Header Ads

test

வவுனியாவில் செல்பி எடுக்க முற்பட்டு ரயிலில் மோதுண்டு உயிரை மாய்த்த இளைஞன்.

 வவுனியா – கல்லாற்றுப்பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் தொடருந்தில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் மதவாச்சி – மன்னார் வீதி கல்லாறுப்பாலத்தில் இடம்பெற்றது.

சம்பவத்தின் போது முருங்கன் பரியாரி கண்டல் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா (வயது -19) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறுப்பாலத்தில் ஏறி தங்களது தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது மன்னார் – பியர் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்தில் மோதி விபத்திற்குள்ளாகினர்.

விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய நபர்  பாலத்தின் கீழே குதித்து உயிர் தப்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments