Header Ads

test

அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சம்பவம் ஒன்றால் ஏற்பட்டுள்ள அமளிதுமளி.

 அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருந்து தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த 19ஆம் திகதி 2000 பேர் கலந்து கொண்ட பிறந்தநாள் நிகழ்வு ஒன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மறு நாள் மீண்டும் 2000 பேருக்கு காலை உணவும் வழங்கப்பட்டுள்ளது. இதுவா ஒரு நாடு ஒரு சட்டம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் பிசீஆர் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என சுற்றுலா  துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் இருப்பதாக பிரசன்ன குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


No comments