கர்ப்பிணிகளாக உள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.
கர்ப்பிணிகளாக உள்ள அரச ஊழியர்களை மீளவும் கடமைக்கு அழைப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சில வரையறைகளுடனேயே இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார்.
அத்தோடு கர்ப்பிணித் தாய்மார்களை மீண்டும் சேவைக்கு அழைக்க குறித்த நிறுவனங்கள், தமது தேவைக்கேற்ப தீர்மானிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற்கொண்டு கர்ப்பவதிகளாக உள்ள அரச ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் தீர்மானத்தை எடுத்ததாகவும் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டார்.
Post a Comment