Header Ads

test

காணாமல் போன முதியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

 யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்தே குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 முதியவர் கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் தேடி வந்ததுடன் அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம் உயரப்புலம் பகுதியிலுள்ள பொதுக்கிணற்றிலிருந்து முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments