Header Ads

test

நாட்டில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி, பலர் வைத்தியசாலையில்.

 பஸ்யால - கிரியுல்ல வீதியின் தன்சலேவத்த பகுதியில் வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், மதியகனே பகுதியைச் சேர்ந்த சந்தன பெரேரா( 47) மற்றும் மானெல் பத்திரன (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எதிரே வந்த வான் மற்றும் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வானின் சாரதியும் குறித்த  வாகனத்தில் பயணித்த பெண்ணும் உயிரிழந்துள்ளதுடன் சிறு குழந்தை உட்பட பலர் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


No comments