மகளின் பதிவு திருமணத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
மகளின் பதிவு திருமணத்திற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா - கொழும்பு வீதியில் வீதியோரமாக நின்றுக் கொண்டிருந்த பாரவூர்தியுடன் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கல்கமுக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் கல்கமுக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Post a Comment