Header Ads

test

யாழிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகுகள் கரை திரும்பவில்லை.

 யாழ்.குருநகரிலிருந்து மீன் பிடிப்பதற்கு சென்ற 2 படகுகள் ஆழ்கடலில் மூழ்கியதாக குருநகர் மீனவ பிரதிநிதிகள் தொிவித்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைகாகச் சென்ற போதே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்தம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

குறித்த இரு படகுகளிலும் மீனவர்கள் ஆறு பேர் பயணித்திருந்த நிலையில் அவர்கள் கடலில் குதித்து தத்தளித்தபோது மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக குருநகரிலிருந்து மீன்பிடிப் படகுகள் பயணித்திருப்பதாகவும் குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் கடலில் தத்தளித்த மீனவர்களை யார் மீட்டார்கள் என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் குருநகர் மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


No comments