முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் அவர்களின் வீடு இராணுவத்தால் முற்றுகை.
யாழ் சாவகச்சேரியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் வீட்டில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியவர்கள், வீட்டுக்குள்ளேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ந.ரவிராஜின் இல்லத்தில் இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் பாலமயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அப் பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டில் அஞ்சலி நிகழ்வு நடந்ததையடுத்து, வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மூவரும் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வந்த பின்னரே செல்ல முடியுமென கூறி, அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ந.ரவிராஜின் துணைவியாரான சசிகலா தற்போது கொழும்பில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment