Header Ads

test

நாட்டின் பல பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யும் என வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய தினத்திற்கான இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஊவா, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


No comments