Header Ads

test

நண்பர்களுடன் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.

 கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை – பெரியநீலாவணையை சேர்ந்த சுலைமான் லெப்பை சராப்கான் (21) என்ற இளைஞர் வாய்க்காலில் நீராடிக் கொண்டிருந்தபோது மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது நண்பர்களுடன் நேற்று மாலை மத்திய முகாம் பிரதேசத்தில் வாய்க்காலில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் நீரில் மூழ்கியதை அவதானித்த நண்பர்கள், அயலவர்களின் உதவியுடன் மீட்டு மத்தியமுகாம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த இளைஞர் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக்கழக கிரிக்கெற் அணியின் முன்னணி வீரரும் அல் -மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.



No comments