யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் பரிதாபகரமாக உயிரிழப்பு.
அவுஸ்திரேலியா - விக்டோரியா மாநிலத்தின் வடக்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம், மெல்பேர்னிலிருந்து 142 கிலோ மீற்றர் தொலைவில் - Bendigo பிராந்தியத்தில் அமைந்துள்ள - Toolleen என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
வாகனமொன்று படகினை கட்டியிழுத்துக் கொண்டு வடக்கு நெடுஞ்சாலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது, வீடொன்றிலிருந்து வெளியே வந்த காருடன் மோதிய இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மாணிக்கம் இரட்ணவடிவேல் (வயது 68) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் , அவரது மனைவி படுகாயங்களுடன் மெல்பேர்ன் Alfred வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் மற்றைய வாகனத்திலிருந்த பயணியொருவர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment