நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்து.
தீபாவளி தினமான இன்று அதிகாலை புல்மோட்டை தள வைத்தியசாலையிலிருந்து திருமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்காவு வண்டியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
நோயாளர்களை ஏற்றிச் சென்ற குறித்த நோயாளர்காவு வண்டி எதிரே அதிவேகத்துடன் வந்த காருடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் நோயாளர்காவு வண்டிச் சாரதி உட்பட சுகாதார உத்தியோகத்தர், பணியாளர் மற்றும் நோயாளர்கள் உள்ளிட்டோர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி காயத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment