Header Ads

test

குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் மின்னல் தாக்கி பலி - வவுனியாவில் சம்பவம்.

 வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார்.

இன்று (26.11) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இராசேந்திரங்குளம் குளப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது அப் பகுதியில் மின்னல் தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 30 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments