Header Ads

test

இந்தியத் தூதுவருடன் வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு.

இந்தியத் தூதுவர் கோபல் பாக்லேவிற்கும் (Gopal Baglay) வடக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கை கடல் பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறும் விடயம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் N.V. சுப்பிரமணியம், வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் உப தலைவர் ஜே. பிரான்சிஸ், தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸன், முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் V.அருள்நாதன் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.



No comments