Header Ads

test

அதிகமாக தலை முடி கொட்டுகிறதா - இதோ உடனடித் தீர்வு.

 பொதுவாக முடி நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும்.

ஆனால் பெரியவர்களை பொறுத்த வரையில் தலையில் உள்ள 10 லட்சம் - 15 லட்சம் முடிகளில் ஒரு நாளைக்கு 80 - 100 முடிகள் வரை இழக்கிறார்கள்.

இந்த அளவு இயல்பானது தான். இதற்கு மேல் அதிகமான பிரச்சினையை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது முடி கொட்டும் பிரச்சினையை எப்படி எளியமுறையில் சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

  • வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.

  • ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும்.

  • தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெய்யில் கலந்து தடவி வரவேண்டும். கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.  

  • தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.

  • நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும்.

  • கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.  

No comments