Header Ads

test

பாதணிக்குள் சூட்சுமமாக பொருளொன்றை மறைத்து வைத்திருந்தவருக்கு நேர்ந்த சம்பவம்.

 மிகவும் சூட்சுமமான முறையில் பாதணிக்குள் கையடக்கத் தொலைபேசிகள் நான்கை நபர் ஒருவர்  மறைத்துவைத்துள்ளார்.

குறித்த கையடக்கத் தொலைபேசிகளை களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற கைதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேகநபர், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், பாணந்துறை நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து கைதியை களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்று சோதனைக்கு உட்படுத்திய போதே, அவர் அணிந்திருந்த இரண்டு பாதணிக்குள்ளிருந்து தலா இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை தெரியவந்தது.


No comments