நாட்டில் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டுக்கு கிடைத்தது தீர்வு.
சந்தையில் லிட்ரோ எரிவாயுக்கு நிலவி வந்த தட்டுப்பாடானது எதிர்வரும் ஆறு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆறு நாட்களுக்குள் அணைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்த தொகையானது வழங்கக்கூடியதாக இருக்கும்.தற்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைகிறது. எதிர்வரும் காலங்களிலும் இது நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எவ்வித குறைப்பாடும் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment