Header Ads

test

மன்னார் மாவட்டத்தை உலுக்கும் கொடிய நோய்.

 மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 20 நாட்களில் 423 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் கொரோனா நிலவரம் தொடர்பில் இன்று (21) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னாரில் நேற்றைய தினம் (20) மேலும் புதிதாக 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை 423 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் 2,799 தொற்றாளர்களும், மன்னாரில் தற்போது வரை 2,816 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments