Header Ads

test

அரசாங்க ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள இலங்கை அரசு.

 சமகால அரசாங்கத்தை விமர்ச்சிக்க அரசாங்க ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  

இது தொடர்பான சுற்றுநிரூபம் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 சமூக வலைத்தளங்களின் மூலம் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் பலர் விமர்ச்சித்து வருவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தடை உத்தரவு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை யும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதாக எழுந்த முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



No comments