கனடாவிற்கு தப்பிச் சென்ற இலங்கை தமிழர்கள் மாலைதீவில் கைது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த சமயம் கனடாவிற்கு கடல் வழியாகச் செல்ல முயற்சித்தபோது மாலைதீவில் அகப்பட்ட ஈழ தமிழர்கள் 60 பேரினது பெயர் விபரங்களை மாலைதீவு அரசாங்கம் இந்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சென்றவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி தமிழ்நாடு இலங்கை மறுவாழ்வு முகாம்களில் இருந்து தப்பிச் சென்று, நீண்டநாள் மீன்பிடி விசைப்படகு மூலம் கனடாவிற்கு பயணித்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக மாலைதீவை அண்டியுள்ள அமெரிக்கப் படைக் கட்டுப்பாட்டுத் தீவில் அகப்பட்டனர்.
இவ்வாறு அகப்பட்டவர்களை அமெரிக்கப் படைகள் மாலைதீவு அரசாங்கத்திடம் கையளித்த நிலையில், அனைவரும் இந்தியாவில் இருந்து புறப்பட்டதனால் இந்திய அரசுக்கு, மாலைதீவு அரசு 60 பேரையும் பொறுப்பேற்குமாறு கோரி பெயர் விபரங்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் அனைவரின் பெயர் விபரங்களுடன், எந்த முகாமில் இருந்து தப்பிச் சென்றவர்கள் என்ற விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment