கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி.
கிளிநொச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் கிளிநொச்சி ஏ-9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள கட்டட உற்பத்தி நிலையத்திற்கு சீமெந்து இறக்கிய பின்னர் பாரவூர்தி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவேளை, அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரவூர்தியின் பின் பக்கத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் குமரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மகேந்திரராசா யூட்கபிசன் மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சவுந்தானந்தன் காந்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment