லிந்துலை - வோல்ட்றீம் தோட்டத்தில் மண் சரிவு - நான்கு வீடுகள் சேதம்.
லிந்துலை - வோல்ட்றீம் தோட்டத்தின் பிரிவில் ஒன்றான லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு நேற்று பெய்த மழை காரணமாக, இரவு வேளையில் சரிந்து விழுந்துள்ளது.
இதனால் நான்கு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன.
அத்தோடு குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களை சேர்ந்த 21 பேர் தற்போது தத்தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
எனினும், ஏனைய வீடுகளுக்கும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதாகவும், இதனால் தாம் அச்சநிலையோடு இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment