Header Ads

test

மன்னாரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிராமங்களுக்குள் புகுந்துள்ள கடல் நீர்.

 மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் அதிகாலை விடத்தல் தீவு கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.

இதன்காரணமாக விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடுமையான மழை காரணமாக கடல் நீரானது கிராமத்துக்குள் புகுந்துள்ளது .

இதனால் குறித்த கிராமத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் விடத்தல் தீவு மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 


No comments