சகோதரியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் சகோதரன் எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் மூழ்கியுள்ள குடும்பம்.
மட்டக்களப்பில் கைப்பேசியில் சார்ஜ் செய்வதில் சகோதரன் மற்றும் சகோதரிக்கிடையே இடம்பெற்ற முரண்பாட்டால் சகோதரன் கிருமி நாசினியை உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மட்டக்களப்பு உன்னிச்சை நெடியமடு பகுதியில் நேற்றைய தினம் (25) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது,
சகோதரியின் கைப்பேசியில் சார்ஜ் குறைவாக இருந்ததால் சார்ஜ் செய்ய சென்றுள்ளார். அதன்போது அவரது சகோதரர் தனது கைபேசியில் சார்ஜ் செய்துகொண்டு இருந்துள்ளார்.
இதேவேளை சார்ஜ் செய்ய சென்ற சகோதரியை தடுத்து நிறுத்தி என்னுடைய கைப்பேசியை சார்ஜ்யில் போட்டிருக்கிறேன், நீ பிறகு போடு என தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட சகோதரி தொடர்ந்து நீ மட்டும்தானா சார்ஜ்யில் போட வேண்டும் நீ பின்னர் போட்டுக்கொள் என்றதும் முரண்பாடு ஏற்பட்டு, மிகவும் கோபமடைந்த சகோதரன் சகோதரின் முதுகில் தாக்கி விட்டு வீட்டுக்குள் சென்று அங்கிருந்த கிருமி நாசினியை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆயித்தியமலை பொலிஸாருடன் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Post a Comment