Header Ads

test

முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு.

 வெலிபென்னயில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் ஒரு தொகை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 9 மி.மீ ரக 248 தோட்டாக்கள் உட்பட பல வகையான தோட்டாக்கள் சுமார் 370 கண்டெடுக்கப்பட்டன. மேலும் வெளிநாட்டு ரக கைத்துப்பாக்கி ஒன்றும், நான்கு மகஸின் மற்றும் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டன.

மேல் மாகாண புலனாய்வு பிரிவினரால் இன்று பிற்பகல் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே முன்னாள் பொலிஸ் பரிசோதகர் வீட்டில் இவை கண்டறியப்பட்டன. இதனையடுத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு ஒன்று இன்றிரவு குறித்த பொலிஸ் பரிசோதகரை படுகொலை செய்து இந்த ஆயுதங்களை கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தெரியவந்துள்ளது.


No comments