கோயிலுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற பெண் ஒருவரிடம் சங்கிலியை அறுத்துக் கொண்டு இருவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (03) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணை ஆலயம் அருகில் வழிமறித்து ஒருவருடைய பெயரைக் கூறி ஆலயத்தில் குறித்த நபர் உள்ளாரா எனக் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் அளிக்க முற்படுகையில் அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு இருவரும் தப்பிச் சென்றுளளனர்.
பெண் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியே இதன்போது அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து வவுனியா காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment