கட்டுநாயக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்.
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பெருந்தொகைப் பணத்தை துபாய்க்கு கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஒரு கோடியே 40 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் சர்வதேச நாணயம் காணப்பட்டதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துபாய் செல்வதற்காக வந்திருந்த குறித்த வர்த்தகர் பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமாக வைத்து குறித்த பணத்தொகையை கொண்டுசெல்ல முயற்சித்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment