பொல்லால் அடித்து பெண்ணொருவர் படுகொலை.
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் , சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தீபாவளி தினமான நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அயல் குடும்பத்துடன் ஏற்பட்ட கைகலப்பை தடுப்பதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment