Header Ads

test

வட மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை.

 வட மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளார். நாளையதினம் இந்துக்களின் தீபாவளி பண்டிகை இடம்பெறுவதால் பொது விடுமுறை நாளாகும். அதனால் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால் அதற்கு பதிலாக வரும் நவம்பர் 13 ஆம் சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்றும் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments