Header Ads

test

இன்றும் ஹோட்டல் ஒன்றில் வெடித்துச் சிதறிய சமையல் எரிவாயு சிலிண்டர்.

 ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் புருட்ஹில் பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை சமையல் எரிவாயு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்து ஒரு மணத்தியாலத்தின் பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் வெடித்து சிதறியதாக ஹோட்டலின் பணியாளர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

எனினும் இந்த வெடிப்பு சம்பவத்தின் போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் அண்மைய நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments