முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு... விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சகல முச்சக்கரவண்டி வாகனங்கள் அனைத்திலும் கட்டண அளவீட்டு கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து இந்த செயற்பாடுகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவும் எதிர்பார்த்துள்ளதாகவும் இதனையடுத்து கட்டண அளவீடு கருவி இன்றி செயல்படும் முச்சக்கரவண்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment