இரகசியத் தகவலையடுத்து வவுனியாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்.
வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இளைஞர் செட்டிகுளம் விஷேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நிற்பதாக விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட விஷேட அதிரடி படையினர் இளைஞரின் பயண பொதியினை சோதனையிட்டனர்.
இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1கிலோ 506 மில்லிகிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர். போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர் வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் வவுனியா காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment