Header Ads

test

கொழும்பில் அச்சத்தை ஏற்படுத்திய படுகொலை - வெளியானது அதிர்ச்சித் தகவல்.

 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த சடலம் இன்றைய தினம் பெண்ணின் கணவர் மற்றும் 2 பிள்ளைகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் மொஹமட் சாஷி மும்டாஸ் என்ற 42 வயதுடைய பெண் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பு 10 ரம்யா பிரதேசம், மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி இந்த பெண் தனது மருமகளுடன் முச்சக்கர வண்டியில் மாளிகாவத்தை பிரதேசம் நோக்கி சென்றுள்ளார்.

அன்று முதல் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லாமையினால் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய முச்சக்கர வண்டியில் சென்ற மற்ற பெண்ணிடம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவராகும். எனினும் தான் மோதரை பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி நடந்து சென்றதாக மருமகள் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் உண்மை தகவலை அறிய பொலிஸார் சிசிரிவி காட்சிகளை சோதனையிட்ட போது அதில் அவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் கடுமையாக சூதாட்டத்திற்கு அடிமையாகியிருந்தார் எனவும், காணாமல் போன தினத்தன்று காலை சூதாட்டக்காரர்களுடன் அவர் இருந்தார் என தெரியவந்துள்ளது.

 இந்தச் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை  நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


No comments