உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை.
அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவுக்கு(Gamini Fernando) மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று காலை 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த தகவல்களை வழங்குவதற்காக இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 16 ஆம் திகதி சி.ஐ.டியில் முன்னிலையாகியிருந்த அவரிடம் 8 மணி நேர வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment